Udhayanidhi Stalin: தேர்தல் வேலைகள் ஓவர் - ’ஆர்டிக்கிள் 15’ படப்பிடிப்பை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin: தேர்தல் வேலைகள் ஓவர் - ’ஆர்டிக்கிள் 15’ படப்பிடிப்பை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதால், தனது ’ஆர்டிக்கிள் 15’ படத்தின் படப்பிடிப்பை நடிகர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    தேர்தல் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதால், தனது ’ஆர்டிக்கிள் 15’ படத்தின் படப்பிடிப்பை நடிகர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடைசியாக இயக்குநர் மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ'வில் நடித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், பார்வையற்றவராக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிஸியாக இருக்கிறார். இதை முடித்த கையோடு அடுத்து ஆயுஷ்மான் குரானா நடித்த பிரபல இந்தி திரைப்படமான 'ஆர்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். சமீபத்திய தகவல்கள் என்னவென்றால், அதன் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதிக்குள் அல்லது 2021 மே மாத ஆரம்பத்தில் துவங்கும் என்பது தான்.

    'ஆர்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். அவர் ஏற்கனவே கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கனா' படத்தை இயக்கி, பாராட்டுகளைப் பெற்றார். போனி கபூர் தனது பேவியூ புராஜெக்ட்ஸ் சார்பிலும், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகியவற்றுடனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆயுஷ்மனின் பாத்திரத்தை பிரதிபலிக்கும் உதயநிதி, சாதி வேற்றுமை பிரச்னைகள் உள்ள கிராமப்புறத்திற்கு அனுப்பப்படும் உயர் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

    இந்தத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதோடு தமிழகம் முழுவதும் களம் காணும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவுவதற்காக நடப்பட்ட செங்கலை தூக்கிக் காட்டியவாறு அவர் செய்த பிரச்சாரம், இத்தேர்தலில் ஹைலைட்டாக அமைந்தது. அதோடு எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை திருடி விட்டதாக அவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: