மன அழுத்தங்களை போக்கி நம்மை லேசாக உணரச் செய்வதில் பண்டிகைககள் உருவம் இல்லாத சைக்கார்டிஸ்டுகள். விதவிதமான உணவு, புத்தாடை, உறவினர் மற்றும் நண்பர்களுடனான இனிய சந்திப்பு இவையெல்லாம் நம்மை புத்துணர்வாக்குவதுடன், நமது நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
அதுவும் பண்டிகைகளில் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு, உணவு என அந்த ஒருநாள் அடுத்து வரும் பல நாட்களுக்கான பாஸிட்டிவிட்டியை நமக்குள் கடத்தி விட்டுச் செல்லும். இந்த மாதிரி பண்டிகைகளில் முக்கியப் பங்கு வகிப்பது சினிமா.
எந்த பண்டிகைக்கு என்ன உடை வாங்கப் போறோம் என்ற எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைவில்லாதது தான், எந்த படம் ரிலீஸாகிறது என்பதும். குறிப்பாக தீபாவளி என்றாலே புது படங்கள் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரிக்கும். கடந்தாண்டு கொரோனா தொற்றால் தீபாவளிக்கு திரையரங்கில் எந்த படமும் வெளியாகவில்லை. அப்போது வெளியாக வேண்டிய விஜய்யின் மாஸ்டர், அதற்கடுத்து வந்த பொங்கலுக்கு தான் வெளியானது. ஆனால் அப்போது திரையரங்கில் 50% பார்வையாளர்கல் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இந்தாண்டு அப்படியில்லை. சரி... இந்த தீபாவளிக்கு வெளியாகும் படங்களைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறோம்.
அண்ணாத்த

அண்ணாத்த
கொரோனா தொற்று சமயத்தில் கடந்த பொங்கலுக்கு பெரிய நடிகரின் படமாக விஜய்யின் மாஸ்டர் வெளியானது. இதையடுத்து இந்த தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த வெளியாகவிருக்கிறது. நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை சிவா இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழகத்தில் 600-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகிறது.
ஜெய் பீம்

ஜெய் பீம்
நடிகர் சூர்யா நடித்துள்ள 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
எனிமி

எனிமி
ஆனந்த் சங்கர் இயக்கத்தில்
விஷால் நடித்துள்ள திரைப்படம் 'எனிமி'. இதில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
எம்ஜிஆர் மகன்

எம்.ஜி.ஆர் மகன்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கத்தில்
சசிக்குமார் நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ தீபாவளியை முன்னிட்டு நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. சசிக்குமாருக்கு ஜோடியாக இதில் மிருணாளினி ரவி நடிக்க,
சத்யராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். கடந்தாண்டே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனாவால் தள்ளிப்போனது.
இதைத் தவிர அருண் விஜய் நடித்த வாடீல் படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.