தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கும் தமிழ் படங்கள்
சன் நெக்ஸ்டில் மாயா பஜார் (தமிழ் ரீமேக்) நெட்ஃபிளிக்ஸில் அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அந்தகாரம்’ திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளங்களில் ரிலீசாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புதிய படங்கள் வெளியிடப்படாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.
அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனிடையே நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படமும் தீபாவளிக்கு அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் சன் நெக்ஸ்டில் மாயா பஜார் (தமிழ் ரீமேக்) நெட்ஃபிளிக்ஸில் அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அந்தகாரம்’ திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளிக்கு முன்பாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டால், பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’, அருள்நிதி, ஜீவா நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’, ‘இரண்டாம் குத்து’ஆகிய 3 படங்களும் திரையரங்கில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.