ஜெயம் ரவி நடித்து வரும் இறைவன் என்ற திரைப்படம்
தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படத்துடன் ஜெயம் ரவி படம் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரும்புத் திரை மெகா ஹிட் படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் சர்தார் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஸ்பை த்ரில்லர் ஆக்சன் ஜேனரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.
இந்நிலையில் சர்தார் தீபாவளியையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷிகன்னா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க - பல் வலிக்கு சிகிச்சை எடுத்த நடிகை… அழகு முகம் கோரமாக மாறிய கொடுமை
இதற்கிடையே, இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி – நயன்தாரா நடிப்பி இறைவன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் செப்டம்பர் 15-ம்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. கார்த்தியும், ஜெயம் ரவியும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 30-ம்தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
இதையும் படிங்க - கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!
தற்போது வரை, பெரிய பட்ஜெட் படங்கள் என்ற அடிப்படையில் கார்த்தியின் சர்தார் மற்றும் ஜெயம் ரவியின் இறைவன் ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
இன்னொரு பக்கம் கோலிவுட்டே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அஜித்தின் 61-வது படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சனில் தாமதம் ஏற்பட்டால் படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம்.
பெரிய பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு மோதவுள்ளதால் இந்த தீபாவளி திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.