ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவளி ரிலீஸ்! தொடங்கியது புக்கிங்! சர்தார்,பிரின்ஸ் படங்களுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

தீபாவளி ரிலீஸ்! தொடங்கியது புக்கிங்! சர்தார்,பிரின்ஸ் படங்களுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

சர்தார், பிரின்ஸ்

சர்தார், பிரின்ஸ்

Diwali Movie Release | தமிழ் திரையரங்கில் இருந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்திருக்கும் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கான முன்பதிவு சில திரையரங்குகள் இன்று முதல் தொடங்குகின்றன.

  தமிழ் திரையரங்கில் இருந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்திருக்கும் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் 21 ஆம் தேதி முதல் திரையிடப்படுகின்றன.

  இதற்காக திரையரங்கு ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஏற்கனவே தங்கள் படங்களை இறுதி செய்த சில திரையரங்குகள்,  முதல் சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்களுக்கான முன்பதிவு தொடங்குகின்றன. இந்த இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பிரின்ஸ் திரைப்படத்திற்கு 21ஆம் தேதி அதிகாலை 5 மணி காட்சிகள் தமிழகத்தில் திரையிடப்பட உள்ளன. அதற்கான முன்பதிவையும் அந்த திரையரங்குகள் தொடங்குகின்றன.

  சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் பெரும் வெற்றியடைந்தன. அதேபோல் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களும் வெற்றிபெற்றன. இதனால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ' isDesktop="true" id="819788" youtubeid="KHUZsWSwxWM" category="cinema">

  சர்தார் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. மொத்தம் 2 நிமிடங்கள் 21 வினாடிகள் ஓடக்கூடியதாக சர்தார் படத்தின் ட்ரைலர் கட் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உளவாளி கேரக்டரில் கார்த்தி நடித்திருக்கிறார். ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள சண்டை மற்றும் சுவாரசிய காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Read More: துணிவு ஷூட்டிங் : அது அஜித் சாரா? சென்னையில் குவிந்த கூட்டம்... ஆனா நடந்த கதை வேறு!

  ' isDesktop="true" id="819788" youtubeid="8OQzz_i3KFE" category="cinema">

  அக்டோபர் 21- ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்தார் திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக 4 மில்லியன் வியூசை கடந்துள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor Karthi, Deepavali, Sivakarthikeyan