கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புதிய படங்கள் வெளியிடப்படாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.
அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனிடையே அக்டோபர் 22-ம் தேதி தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய படங்களை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. தியேட்டர்கள் திறக்கப்பட்டால் ஐம்பது சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பதால் முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புகள் குறைவு.
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’, அருள்நிதி, ஜீவா நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’, ‘இரண்டாம் குத்து’ஆகிய 3 படங்கள் தீபாவளி ரிலீசை உறுதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.