முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'பிரச்னை கூடாது.. இதுதான் டீல்'.. வாரிசு, துணிவுக்கு பக்காவாக ப்ளான் செய்த நெல்லை தியேட்டர்கள்!

'பிரச்னை கூடாது.. இதுதான் டீல்'.. வாரிசு, துணிவுக்கு பக்காவாக ப்ளான் செய்த நெல்லை தியேட்டர்கள்!

துணிவு - வாரிசு

துணிவு - வாரிசு

திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிகளை சேர்ந்த விநியோகஸ்தர்கள் துணிவு மற்றும் வாரிசு படத்துக்கு உடன்பாடு செய்துள்ளனர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை திருநெல்வேலி பகுதிகளில் உள்ள தனி திரையரங்குகளில் தலா இரண்டு காட்சிகளை திரையிடுவது என உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திருநெல்வேலி - கன்னியாகுமரி பகுதிகளில் துணிவு படத்தை பிரதாப் என்பவரும், வாரிசு படத்தை முத்துகனி என்பவரும் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களையும் தனித் திரையரங்குகளில் திரையிடுவது குறித்து போட்டி நிலவி வந்தது. விநியோகஸ்தர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், எந்த திரையரங்கம் எந்த படத்திற்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஶ்ரீதேவியின் நினைவுகள்.. வீடு முழுவதும் பெயிண்டிங்.. ஜான்வி கபூரின் சென்னை வீடு!

இந்த நிலையில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி பகுதிகளின் விநியோகஸ்தர்கள் சமரச உடன்பாடு செய்து கொண்டுள்ளனர்.  அதன்படி திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள தனித் திரையரங்குகளில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய படங்களை தலா இரண்டு காட்சிகள் திரையிடுவது என விநியோகஸ்தர்கள் உடன்பாடு செய்து கொண்டுள்ளனர்.

மாஸ்தான்.. எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்.. உறுதியானது அடுத்தப்படம்.. விவரம்!

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு எந்த திரையரங்கிற்கு திரையரங்குகளை ஒதுக்குவது என குழப்பமும் அழுத்தமும் நிலவி வந்தது இந்த நிலையில் புதிய உடன்பாட்டை எடுத்துள்ளனர்.

First published:

Tags: Actor Vijay, Kollywood, Tamil Cinema