ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நேரில் 20000 ரசிகர்கள்.. லைவில் குவிந்த கூட்டம்.. சென்னையில் மாஸ் காட்டிய அனிருத்!

நேரில் 20000 ரசிகர்கள்.. லைவில் குவிந்த கூட்டம்.. சென்னையில் மாஸ் காட்டிய அனிருத்!

அனிருத் மியூசிக் கான்செர்ட்

அனிருத் மியூசிக் கான்செர்ட்

அனிருத்தின்  சார்ட்பஸ்டர் பாடல்களை நேரில் அனுபவிக்க, 20,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

டிஸ்னி+  ஹாட்ஸ்டாரின் அனிருத் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது

சென்னையில் அக்டோபர் 21 அன்று நடைபெற்ற, பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சியில், அனிருத்தின்  சார்ட்பஸ்டர் பாடல்களை நேரில் அனுபவிக்க, 20,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.

இசை நிகழ்ச்சி நடந்த அரங்கில் அலைகடலென திரண்ட ரசிகர்களின் கூட்டம் மட்டுமின்றி, இந்நிகழ்வு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களும் இந்த கான்செர்ட்டை பார்த்து ரசித்தனர். இந்தியாவில் ஒரு இசை நிகழ்ச்சி இவ்வாறு நேரடியாக ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி அனிருத்துடன் ரசிகர்கள் இணைந்து கொண்டாடும் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. பாடகி ஜொனிடா காந்தியும் இந்நிகழ்ச்சியில் இணைந்து, அனிருத் கூட்டணியில் வெளியான பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக இசைத்து, ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தனர்.

Read More: நடிகரின் காதலுக்கு நோ.. லவ்வுக்கு அட்வைஸ் செய்த ஜான்வி கபூர்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

Published by:Srilekha A
First published:

Tags: Anirudh