Puri Jagannadh: அன்னை தெரசாவுக்கு டிஸ்லைக் - ஆவேசமான இயக்குனர் பூரி ஜெகன்நாத்

பூரி ஜெகன்நாத்

அவ்வப்போது சமூகவலைதளத்தில் முக்கியப் பிரச்சனைகள் குறித்து பூரி ஜெகன்நாத் பேசுவதுண்டு. தற்போது அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சு குறித்து தனது கருத்தை அவர் முன் வைத்துள்ளார்.

  • Share this:
    அன்னை தெரசா படத்துக்கு டிஸ் லைக் விழுந்த விவகாரம் இயக்குநர் பூரி ஜெகநாத்தை கோபமடைய செய்திருக்கிறது.

    சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் வெறுப்புப் பேச்சுகள் அதிகமாகி வருகிறது. முகம் தெரியாது என்பதால், யாரையும் அவதூறாக பேசுகிறவர்கள், இணையத்தில் அதிகரித்துவிட்டனர். காந்தியைவிட இங்கு கோட்சேவுக்கே அதிக ரசிகர்கள். சமீபத்தில் அன்னை தெரசாவின் புகைப்படத்துக்கு லைக்ஸைவிட அதிக டிஸ்லைக்குகள் கிடைத்தன. இது இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை ஆவேசமடைய செய்துள்ளது.

    பூரி ஜெகன்நாத் தெலுங்கின் முக்கிய இயக்குனர். இந்திப் படங்களும் இயக்குவார். இவரது இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தின் தமிழ் ரீமேக்கே, விஜய் நடித்த போக்கிரி திரைப்படம். இவரது டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கே விஷால் நடித்த அயோக்யா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவ்வப்போது சமூகவலைதளத்தில் முக்கியப் பிரச்சனைகள் குறித்து பூரி ஜெகன்நாத் பேசுவதுண்டு. தற்போது அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சு குறித்து தனது கருத்தை அவர் முன் வைத்துள்ளார்.

    "நாளுக்குநாள் சமூகவலைதளத்தில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை ட்ரோல் செய்வதும், அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் புகைப்படத்திற்கு ஆயிரம் லைக்குகளே கிடைத்தன. அதிர்ச்சிதரும் விதமாக அந்த புகைப்படத்தை பத்தாயிரம் பேர் டிஸ்லைக் செய்திருந்தனர். யார் இவர்கள்? என்ன மாதிரியான மனநிலை கொண்டவர்கள்? அன்னை தெரசாவின் அருகில் நிற்பதற்கு தகுதியில்லாத இவர்கள், டிஸ்லைக் செய்வதன் மூலம் எதை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்?" என காட்டமாக கேட்டுள்ளார்.

    இந்த வெறுப்புப் பேச்சுகளுக்கு தீர்வாக அவர், ஒவ்வொருவரின் சமூகவலைதள கணக்கையும் அவரவர் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். பரிசீலிக்கப்பட வேண்டிய கோரிக்கை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: