Home /News /entertainment /

சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகியாகும் திஷா பதானி!

சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகியாகும் திஷா பதானி!

சூர்யா, திஷா பதானி

சூர்யா, திஷா பதானி

ஐந்தாவது முறையாக சூர்யா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India


சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாக்கும் புதிய படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு அனுப்பப்பட பிடிப்பு வரும் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.


இதற்கான பூஜை நாளை மறுதினம் நடைபெறுகிறது.  ஆனால் படத்தில் யார் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் திஷா பதானி சூர்யாவுக்கு கோடியாக நடிக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.


அதேபோல் அந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படங்களுக்கு வித்யாசாகர், அனிருத், டி.இமான் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.




இந்த நிலையில் இரண்டாவது முறையாக தேவி ஸ்ரீ பிரசாத்துடன் கூட்டணி அமைக்கிறார்.  இவர் ஏற்கனவே சூர்யா நடித்த மாயாவி, ஆறு,  சிங்கம், சிங்கம் 2 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.


அந்த வரிசையில் தற்போது ஐந்தாவது முறையாக சூர்யா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Suriya, Entertainment

அடுத்த செய்தி