ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜயுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா?

விஜயுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா?

விஜய் மற்றும் எஸ்.ஜே.சூர்யா

விஜய் மற்றும் எஸ்.ஜே.சூர்யா

விஜய் -  எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ஏற்கனவே நண்பன், மெர்சல் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதில் மெர்சல் திரைப்படத்தின் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கம் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி நடைபெற்று வருகிறது.

தற்போதைய சூழலில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நான்காம் கட்டப்பட பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.  இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து சென்னையில் தொடங்குகின்றனர்.

வாரிசு திரைப்படத்தில் விஜய் தவிர ராஸ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு,  ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

Also read... ஆகஸ்ட் 11-ம் தேதி விருமன் படத்தை வெளியிட பேச்சுவார்த்தை

குறிப்பாக சம்பள பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் உடன்பாடு ஏற்றப்பட்டால் எஸ்.ஜே.சூர்யா வாரிசு திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. விஜய் -  எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ஏற்கனவே நண்பன், மெர்சல் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதில் மெர்சல் திரைப்படத்தின் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் - எஸ்.ஜே சூர்யா கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பாரா இல்லையா என்பது முடிவாகும். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, SJSurya