தலைவி திரைப்படம் வசூலில் ஏமாற்றம்

தலைவி

வட இந்தியாவில் பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ்கள் தலைவியை திரையிடவில்லை.

 • Share this:
  பெரும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த தலைவி வசூலில் ஏமாற்றத்தை தந்துள்ளது. முதல் நாளில் வடஇந்தியாவில் இந்தப் படம் 20 - 25 லட்சங்கள் மட்டுமே வசூலித்துள்ளது.

  தலைவி படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரித்ததாக கூறப்பட்டது. திரையரங்கில் படத்தை வெளியிட்டால் மட்டுமே இந்த தொகையை எடுக்க முடியும் என்பதால், படத்தை ஓடிடியில் வெளியிடாமல் சகஜநிலை திரும்ப காத்திருந்தனர். ஆகஸ்ட் 19 அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் வெளியானதைத் தொடர்ந்து ஷாங் - சி, எஃப் 9 போன்ற ஹாலிவுட் படங்களும் திரையரங்கில் வெளியாகி ஓரளவு வசூலை பெற்றன. இதில் ஷாங் - சி யே வசூலில் முன்னணியில் உள்ளது.

  தலைவி படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். வட இந்தியாவில் பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ்கள் தலைவியை திரையிடவில்லை. படம் வெளியாகி நான்கு வாங்கள் கழித்தே படத்தை ஓடிடிக்கு தர வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர் தரப்பு மறுத்ததே இதற்கு காரணம்.

  முதல்நாளில் தலைவியின் இந்திப் பதிப்பு 20 - 25 லட்சங்கள் மட்டுமே வசூலித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 80 லட்சங்கள். பிற மாநிலங்களும் சேர்த்து முதல் நாளில் 1.25 கோடியை மட்டுமே படம் வசூலித்துள்ளது. இரண்டாவது நாளில் தமிழக வசூல் 45 - 50 லட்சங்களாக குறைய, வட இந்தியாவில் வசூல் அதிகரித்துள்ளது. எனினும் இரண்டாவது நாளிலும் வசூல் 2 கோடியை தொடவில்லை. வெளிநாடுகளில் வசூலித்ததையும் சேர்த்து, உலக அளவில் தலைவி முதலிரு தினங்களில் 4.83 கோடிகளையே பெற்றுள்ளது. இது மிகவும் குறைவு.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விடுமுறை தினங்களிலேயே இந்த வசூல் என்றால், வார நாள்களில் படத்தின் வசூல் எப்படியிருக்கும் என கணித்துக் கொள்ளுங்கள். படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டிருந்தாலாவது அதிக தொகை தயாரிப்பாளருக்கு கிடைத்திருக்கும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: