இரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன் ராஜேஷ் எம் ஆகியோர் இயக்கியிருக்கும் ஆந்தாலஜி படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
தமிழில் கணிசமான எண்ணிக்கையில் ஆந்தாலஜிகள் தயாரிக்கப்படுகின்றன. ஓடிடி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு ஆந்தாலஜிக்கு ஒரு சமூக அந்தஸ்து கிடைத்திருக்கிறது எனலாம். ஆனால் தமிழில் இதுவரை வெளிவந்த ஆந்தாலஜியில் குறிப்பிடும்படியான ஆந்தாலஜிகள் எதுவுமில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதேநேரம் மலையாளம், இந்தியில் தரமான பல ஆந்தாலஜிகள் வெளிவந்துள்ளன. தெலுங்கிலும் கூட மோசமில்லாத சில ஆந்தாலஜிகள் வெளிவந்துள்ளன.
இயக்குனர் வெங்கட்பிரபு, இரஞ்சித், சிம்புதேவன், ராஜேஷ் எம் ஆகியோர் இணைந்து உருவாகியிருக்கும் ஆந்தாலஜி விரைவில் சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. விக்டிம் என்று பெயர் வைக்கப் பட்டிருக்கும் இந்த ஆந்தாலஜி இதுவரை வெளிவந்த தமிழ் ஆந்தாலஜிகளிலிருந்து மாறுபட்டு இருக்கும், தரமாக இருக்கும் என்று திரையுலகினர் கூறுகின்றனர்.
Also read... அவள் ஒரு தொடர்கதை... நடிகை சுஜாதாவின் மறுபக்கம்...
வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இரஞ்சித். அந்தவகையில் குருவும், சிஷ்யனும் இணையும் முதல் ஆந்தாலஜி இது. விரைவில் இதன் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pa. ranjith, Venkat Prabhu