• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கதைத் திருட்டு புகாரில் ஷங்கரின் தெலுங்குப் படம்...?

கதைத் திருட்டு புகாரில் ஷங்கரின் தெலுங்குப் படம்...?

இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர்

கார்த்திக் சுப்புராஜிடம் நான் சொன்ன கதையை அவர் ஷங்கரிடம் கூறியிருக்கிறார் என உதவி இயக்குனர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ராம் சரண்  நடிப்பில் தெலுங்கில் புதிய படத்தை தொடங்குகிறார் ஷங்கர். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவும், கதைத்திருட்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஷங்கரின் எந்திரன் படத்தின் கதைகூட, என்னுடையது என பலர் குரல் எழுப்பியது நினைவிருக்கலாம். ஒரு எழுத்தாளர் வழக்கு தொடுத்து கடைசியில் வழக்கு தள்ளுபடியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது சங்கர் இயக்கத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் குரல் எழுப்பியுள்ளார்.

Also read... ஜேம்ஸ் பாண்டின் நோ டைம் டூ டை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இந்தப் படத்தின் கதையை ஷங்கரிடம் கூறியவர் கார்த்திக் சுப்புராஜ். இதற்காக பெரும் தொகை அவருக்கு தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜிடம் நான் சொன்ன கதையை அவர் ஷங்கரிடம் கூறியிருக்கிறார் என உதவி இயக்குனர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியுள்ளார். பெரிய இடத்து விவகாரம் என்பதால் பிரச்சனை வெளியே வராமல் சுமூகமாக பேசித் தீர்க்கப்படலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: