Home /News /entertainment /

அமீர், வெற்றிமாறன் இணையும் இறைவன் மிகப்பெரியவன்!

அமீர், வெற்றிமாறன் இணையும் இறைவன் மிகப்பெரியவன்!

அமீர் - வெற்றிமாறன்

அமீர் - வெற்றிமாறன்

அமீர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆதி பகவான். 2013-ல் இந்தப் படம் வெளியானது.

வெற்றிமாறன், எழுத்தாளர் தங்கம் இணைந்து கதை, வசனத்தை எழுத, அமீர் இயக்கும் திரைப்படத்திற்கு இறைவன் மிகப் பெரியவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் லுக்கையும் வெளியிட்டுள்ளனர்.

பருத்திவீரன் போன்ற சிறந்த திரைப்படத்தை தந்த அமீர் இயக்கத்தில் இருந்து ஒதுங்கியது தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகும். அவர் மீண்டும் படம் இயக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தமுறை வெற்றிமாறனும், எழுத்தாளர் தங்கமும் அவரது படத்திற்கான கதை, வசனத்தை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பருத்திவீரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராம்ஜி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இன்று படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர். படத்துக்கு  இறைவன் மிகப் பெரியவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Valentine’s Day 2022: காதலில் திளைத்து பின் பிரிந்து போன காதல் ஜோடிகள்!

இதற்கு முன் வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .அடுத்து சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் அமீர் நடிக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் தனுஷின் மாறன் திரைப்படத்திலும் அமீர் நடித்துள்ளார். இப்படி நடிப்பில் பிஸியாகி அவர் ஒரேயடியாக இயக்கத்தை மறந்துவிடுவாரோ என்று நினைத்தவேளையில் இறைவன் மிகப் பெரி யவன் படஅறிவிப்பை வெளியிட்டு ஆறுதல் அளித்துள்ளார்.

Valentine's Day 2022: காதலர்கள் மிஸ் பண்ணக்கூடாத தமிழ் ரொமாண்டிக் திரைப்படங்கள்!

அமீர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆதி பகவான். 2013-ல் இந்தப் படம் வெளியானது. ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தை இயக்குகிறார். அத்துடன் சில வருடங்கள் முன் ஆர்யா மற்றும் அவரது தம்பி சத்யா நடிப்பில் அறிவிக்கப்பட்ட சந்தனத்தேவன் திரைப்படத்தையும் அமீர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இறைவன் மிகப்பெரியவன் படத்தை ஜாபர் தயாரிக்கிறார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி