ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெளியானது இயக்குனர் விஜய்யின் 'ஃபைவ் சிக்ஸ் செவன் எயிட்' வெப் சீரிஸ்!

வெளியானது இயக்குனர் விஜய்யின் 'ஃபைவ் சிக்ஸ் செவன் எயிட்' வெப் சீரிஸ்!

இயக்குனர் விஜய்

இயக்குனர் விஜய்

பிரபல இயக்குனர் விஜயின் ஃபைவ் சிக்ஸ் செவன் எயிட் இணைய தொடர் வெளியாகி உள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குனர் விஜய் Zee  நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள 'ஃபைவ் சிக்ஸ் செவன் எயிட்' என்ற இணைய தொடர் வெளியாகி உள்ளது.

நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ஃபைவ் சிக்ஸ் செவன் எயிட் இணைய தொடருக்கான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் விஜய், பாலா,நடன இயக்குனர்,  ஸ்ரீதர், நாகேந்திர பிரசாத் நடிகர் ஜீவா,  பாடலாசிரியர் கார்க்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஃபைவ் சிக்ஸ் செவன் எயிட் இணைய தொடரை விஜய் பிரசன்னா ஜே.கே, மிருதுளா ஸ்ரீதரன் ஆகிய மூவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

முழுக்க முழுக்க நடனத்தை பின்னணியை கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டு இருக்கிறது. லட்சுமி படத்தில் நடித்த திவ்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் கோதண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிறந்தநாள் ட்ரீட் ஆக இன்று வெளியாகிறது நடிகை நயன்தாரா கனெக்ட் படத்தின் டீசர்!

இந்த விழாவில் பேசிய மதன் கார்க்கி, நடனத்தை வைத்து இயக்குவது கடினம், அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது மிகவும் கடினம். ஆனால் இயக்குனர் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன என்பதை தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும் படமாக இது உருவாகியுள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல் இயக்குனர் பாலா பேசுகையில் தன்னுடைய உதவி இயக்குனர் மிருதுளா ஸ்ரீதரன், இதில் பணியாற்றிப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இந்த தொடர் பார்க்க நன்றாக இருப்பதாகவும் கூறினார்.

அதர்வா நடித்துள்ள பட்டத்து அரசன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த இணைய தொடர் இன்று வெளியாகி உள்ளது. இதற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.CS  இசையமைத்துள்ளார்.

Published by:Srilekha A
First published:

Tags: Tamil Cinema, TV series