ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தில் போலீஸாக நடிக்கும் இயக்குனர் விஜய் மில்டன்

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தில் போலீஸாக நடிக்கும் இயக்குனர் விஜய் மில்டன்

இயக்குனர் விஜய் மில்டன்

இயக்குனர் விஜய் மில்டன்

ராஜூ முருகன் இயக்கம் ஜப்பான் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. 

  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் இயக்குனர் விஜய் மில்டன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சர்தார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கம் ஜப்பான் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.  மேலும் 15 ஆம் தேதியில் இருந்து கார்த்தி படபிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

இதற்கான ஷூட்டிங் ராமநாதபுரத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுவும் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.  அத்துடன் நடிகர் கார்த்தியுடன் படம் முழுக்க வரும் வகையில் அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவு,  இயக்கம் ஆகியவற்றில் முத்திரை பதித்த விஜய் மில்டன் தற்போது நடிப்பிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஜப்பான் திரைப்படத்தில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

'நல்லா இருமா'வுக்கு நல்ல ரீச்.. விஜய் சேதுபதியின் 'DSP' படத்தின் முதல் சிங்கள்!

அதை போல் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்த திரைப்படத்தை குறுகிய கால தயாரிப்பாக முடிக்க ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Karthi