Home /News /entertainment /

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையளிக்கிறது - விக்னேஷ் சிவன்

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையளிக்கிறது - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இடம்பெற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகளை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மேற்கொண்டார்.

  • News18
  • Last Updated :
    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நிகழ்ச்சியை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக பெருமைப்படுவதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இடம்பெற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகளை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மேற்கொண்டார்.

    இந்நிலையில், இந்த விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலை நிகழ்ச்சிகள், மேடை அமைப்பு உள்ளிட்டவற்றை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழரின் வரலாற்று பெருமையை உலகம் அறிந்து கொள்ளும் வகையில் தயார் செய்ததாக தெரிவித்தார்.

    அரங்கினுள் ஒளிபரப்பப்பட்ட காணொளிக்கான பின்னணி குரலை நடிகர் கமலஹாசன் கொடுத்ததாகவும், அதற்கு அவருடைய குரல் தான் மிகச் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து கமலஹாசனை பின்னணி குரல் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    Also read... தமிழ் சினிமாவில் பேசப்பட்ட சோழர்களின் வரலாற்று கதைகள்

    தரைதளத்தில் அமைக்கப்பட்டிருந்த 3டி தொழில்நுட்ப திரை பற்றி பேசிய விக்னேஷ் சிவன், இது இந்தியாவில் இதுவரை யாரும் பயன்படுத்தாத தொழில்நுட்பம் எனவும், துபாய் போன்ற வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பத்தை நன்கு அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chess Olympiad 2022, Director vignesh shivan

    அடுத்த செய்தி