இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழில் 35க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் மிகவும் ஹிட்டான சில பாடல்களை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் என்றுதான் விக்னேஷ் சிவன் அறியப்பட்டு வருகிறார். அவருக்கு பாடலாசிரியர் என்ற இன்னொரு முகமும் உள்ளது.
ஏனோதானோவென எழுதாமல் தான் எழுதிய ஒவ்வொரு பாடல்களையும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை செதுக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.
மாஸ், காதல், ஃப்ரெண்ட்ஷிப், வாழ்க்கை தத்துவம், மோட்டிவேஷன் என பல ஜேனர்களில் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்கள் ஹிட்டடித்துள்ளன.
கடைசியாக அஜித்துக்கு வலிமை படத்தில் ஓபனிங் பாடலான நாங்க வேறமாறி பாடலை விக்னேஷ்தான் எழுதியுள்ளார். இதன் வரிகள் கேட்போருக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. விக்னேஷின் வரியும், யுவனின் பீட்டும் சேர்ந்து இந்த பாடலை ஹிட்டாக்கியது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில், ரெண்டு காதல், தாராள பிரபு படத்தின் டைட்டில் ட்ரேக், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் எங்க அண்ணன் உள்ளிட்டவையும் விக்னேஷ் எழுதியவைதான்.
கோலமாவு கோகிலா படத்தில் 4 பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தில் லீட் ரோலில் நடித்தவர் நயன்தாரா.
சூர்யாவை விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தின் அனைத்து பாடல்களையும் விக்னேஷ் எழுதியுள்ளார்.
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் சூப்பர் ஹிட்டான அதாரு அதாரு பாடலையும் எழுதியது விக்னேஷ் சிவன்.
ரெமோ படத்தில் வரும் செஞ்சிட்டாளே, அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்ற சோக்காளி, நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்னே, தங்கமே உன்னத்தான், எனை மாற்றும் காதலே உள்ளிட்டவை விக்னேஷ் சிவனின் ஹிட் பாடல்களில் சில.
இயக்குனராக அறியப்படும் விக்னேஷ் சிவன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாகி இருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.