’இறங்கி அடிச்சுத் தூக்கிய தல அஜித்’ - விக்னேஷ் சிவன்

விஸ்வாசம் படத்தைப் பார்த்த திரைத்துறையினர் பலரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Web Desk | news18
Updated: January 12, 2019, 1:37 PM IST
’இறங்கி அடிச்சுத் தூக்கிய தல அஜித்’ - விக்னேஷ் சிவன்
நயன்தாராமற்றும் விக்னேஷ் சிவன்
Web Desk | news18
Updated: January 12, 2019, 1:37 PM IST
அஜித்தின் விஸ்வாசம் படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கருத்து கூறியுள்ளார்.

அஜித் - சிவா கூட்டணியில் வெளியான படம் விஸ்வாசம் இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு இமான் இசைமைத்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழகத்தில் முதல்நாள் வசூலில் பேட்ட படத்தை அதிகம் வசூல் செய்திருப்பதாகவும், தமிழகம் தவிர மற்ற இடங்களில் விஸ்வாசம் படத்தை விட பேட்ட படம் அதிகம் வசூல் செய்திருப்பதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அமெரிக்காவில் பேட்ட திரைப்படம் ரூ. 5 கோடியே 28 லட்சமும், விஸ்வாசம் ரூ.60 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.படத்தைப் பார்த்த திரைத்துறையினர் பலரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “எமோஷனலான கதையம்சம் கொண்ட படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் சிவா. அவருக்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் இமான் இருந்துள்ளார். அஜித் இறங்கி அடிச்சுத் தூக்கியிருக்கிறார். அதுதான் விஸ்(Awsome). மீண்டும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு கதாபாத்திரமாக நயன்தாராவின் கதாபாத்திரம் அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Actress Nayanthara - Director Vignesh Shivanபேட்ட படம் எனக்கும் மகிழ்ச்சி தான்: ரஜினி பேட்டி - வீடியோ

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...