மு.க. ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்...!

நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்

news18
Updated: March 25, 2019, 4:14 PM IST
மு.க. ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்...!
நயன்தாராமற்றும் விக்னேஷ் சிவன்
news18
Updated: March 25, 2019, 4:14 PM IST
இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு நன்றி கூறியுள்ளார்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

நடிகர் ராதாரவி பேசுகையில், “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது” என பேசினார்.

நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்

நடிகர் விக்னேச் சிவன் தனது ட்விட்டர் பதிவில், பொள்ளாச்சி விவகாரத்திற்கு குரல்கொடுத்த மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஒரு பெண்ணை இழிவாக பேசிய ராதாரவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிவிட்டரில் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் ராதாரவியின் பேச்சுக்கு  கண்டனம் தெரிவித்தவர்களுக்கு தனது சமூக வலைதளபக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார். அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
Loading...வீடியோ: நயன்தாராவை பற்றி தவறாக பேசவில்லை - ராதாரவி விளக்கம்

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...