Home /News /entertainment /

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எங்கே? புதிய அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எங்கே? புதிய அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர்.

  • News18
  • Last Updated :
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெற இருந்த நிலையில் சில காரணங்களால் அங்கு நடத்தவில்லை என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

    பிரபல தென்னிந்திய நடிகை நயன்தாரா 'நானும் ரவுடி தான்' இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் விஷயம் அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். அவர்களின் திருமண வரவேற்பிற்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட 30 பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

    Also read... ’டான்’ முதலில் எனக்கு தான் வந்தது... அந்த காட்சிக்காக படத்தை தவிர்த்தேன்: உதயநிதி ஸ்டாலின்

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் பேசுகையில் வரும் 9ம் தேதி நயன்தாராவை திருமணம் செய்கிறேன். மகாபலிபுரத்தில் திருமணம் நடக்கிறது. திருப்பதியில் திருமணம் செய்ய நினைத்தோம். ஆனால் சில காரணங்களால் அங்கு நடத்த முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும், இயக்குனராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக வெற்றியடைந்துள்ளேன். அதற்கு செய்தியாளர்களாகிய உங்கள் ஆதரவு முக்கியமானதாக இருந்தது. தற்போது வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் தேவை என்றும் அவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Nayanthara, Vignesh Shivan

    அடுத்த செய்தி