முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித் படத்திலிருந்து விலகியதை உறுதிசெய்த விக்னேஷ் சிவன்.?

அஜித் படத்திலிருந்து விலகியதை உறுதிசெய்த விக்னேஷ் சிவன்.?

விக்னேஷ் சிவன் - அஜித்

விக்னேஷ் சிவன் - அஜித்

நடிகர் அஜித்குமாரின் AK62 படத்தின் பெயரை  தனது டிவிட்டர் பயோவில் இருந்து  இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கியுள்ளதால் அந்த படத்தில் இருந்து அவர் விலகியதை உறுதி செய்ததாக தகவல் பரவி வருகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் முதல் காட்சியில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில்  'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 25 நாட்களை கடந்து ஓடி வருகிறது.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருந்தார்.

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் அரவிந்த்சாமி, சந்தானம் முக்கிய வேடங்களில்  நடிக்கவுள்ளதாகவும் நாளுக்கு நாள் வெவ்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. கீரிடம், பில்லா படங்களுக்கு பிறகு அஜித் - சந்தானம் காம்போ இணையவிருப்பதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகளும்  அதிகமாய் இருந்து வந்தன.

சில நாட்களுக்கு முன் AK62 படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பு தரப்புக்கு இந்தப் படத்தின் கதை பிடிக்காததால் விக்னேஷ் சிவன் விலகியதாகவும் வேறு ஒரு இயக்குநர் அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனோ, இல்லை லைகா நிறுவனமோ இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவனின் செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது ட்விட்டரில் தன்னுடைய பயோவில் “அஜித் 62 இயக்குனர்” என்ற ஹேஸ்டேக்கை நீக்கியுள்ளார். இதன் மூலம் அவர் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Director vignesh shivan