முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தெலுங்கு முன்னணி நடிகரை இயக்கப் போகும் வெற்றிமாறன்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு

தெலுங்கு முன்னணி நடிகரை இயக்கப் போகும் வெற்றிமாறன்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

Director Vetrimaaran : இயக்குனர் வெற்றி மாறன் தற்போது சூரி நடிக்கும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

  • Last Updated :

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ஒருவரை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழில் பல வெற்றி படங்களை அளித்த இயக்குனர் வெற்றி மாறன் தற்போது சூரி நடிக்கும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு வரும் விடுதலை திரைப்படம், தமிழ் சினிமாவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... ரஜினி, கமலுக்கு டெரர் காட்டிய ராமராஜன் படம்

இந்த படத்தை முடித்துக் கொண்டு சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றி மாறன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இதன்பின்னர் அவர் விஜய்யை இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

தமிழில் வெளியானது ரன்பீர் கபூர் பட ட்ரெய்லர் 'பிரம்மாஸ்திரம்'!

இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆருக்கு வெற்றிமாறன் ஒரு கதை சொன்னதாகவும், இதற்கு என்டிஆர் தரப்பில் ஓகே சொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர். ஆர்.ஆர். படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பு இந்திய அளவில் பேசப்பட்டது. தமிழிலும் இந்த படம் நல்ல வசூலை குவித்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த நடிகை தீபிகா படுகோனே?

தற்போது ஜூனியர் என்டிஆர்,கொரட்டல சிவா மற்றும் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படங்களை முடித்துக் கொண்டு அவர் வெற்றி மாறன் இயக்கும் படத்தில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Director vetrimaran