முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “பள்ளிகளில் ஜாதி சான்றிதழ் கேட்பதை தடுக்க வேண்டும்” வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு

“பள்ளிகளில் ஜாதி சான்றிதழ் கேட்பதை தடுக்க வேண்டும்” வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

நடிகர்களை தலைவர் என்று சொல்வது வருத்தமான உள்ளது. - வெற்றிமாறன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பள்ளி, கல்லூரிகளில் ஜாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் எனவும் விருப்பப்படுவோருக்கு ‘No caste' சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

சினிமாவை தாண்டி பொதுவெளியில் அவர் பேசும் முற்போக்கு கருத்துக்களுக்காக அறியப்பட்டவர் வெற்றிமாறன். இந்நிலையில் அவர் இந்நிகழ்ச்சியில் பேசிய பேச்சு ஒரு பக்கம் ஆதரவையும் அதே சமயம் பலத்த விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “பள்ளி, கல்லூரிகளில் ஜாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும். என் பிள்ளைகளுக்கு ‘No Caste' சான்றிதழ் பெற முயற்சித்தேன். அப்படி தர முடியாது என கூறிவிட்டனர். இதற்காக நீதிமன்றம் சென்றபோதும் நீங்கள் ஏதேனும் ஒரு ஜாதியை குறிப்பிட்டே ஆக வேண்டும் என கூறினர். ஜாதி சான்றிதழ் தேவையில்லை என நினைப்பவர்கள் ஜாதியற்றவர்கள் என போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

ஆனால் அதே சமயம் சமூக நீதி அடிப்படையில், உரிமையை பெறுவதற்கு சமூகநீதியின் அடிப்படையில், ஒருவர் அந்த சாதி சான்றிதழை பயன்படுத்து அவசியம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நடிகர்களை தலைவர் என்று சொல்வது வருத்தமாக உள்ளது. அவர்கள் நட்சத்திரங்கள் தலைவர்கள் இல்லை. முன்பெல்லாம் நடிகர்கள் அரசியலுடன் தொடர்பில் இருந்தார்கள். அவர்களை தலைவர் என்று அழைத்தது பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை” எனவும் கூறினார்.

First published:

Tags: Caste, Director vetrimaran, School, Vetrimaran