ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எனது படங்களில் முடிந்தவரை மது, புகைப்பிடித்தல் காட்சிகளை தவிர்ப்பேன் - வெற்றிமாறன்!

எனது படங்களில் முடிந்தவரை மது, புகைப்பிடித்தல் காட்சிகளை தவிர்ப்பேன் - வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன்

இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.  எனவே சரியான தூக்கமும், முறையான உணவு பழக்கமும் தேவை என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

'இளைய இதயம் காப்போம்' என்ற விழிப்புணர்வு குறும்பட போட்டி லயோலா கல்லூரி மற்றும் பிரசாந்த் மருத்துவமனை இணைந்து நடத்தியது.  அதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இதயம் தொடர்பான குறும்படங்களை இயக்கியிருந்தனர்.  அந்த படங்களில் சிறந்த மூன்று குறும்பபடங்களுக்கான பரிசு வழங்கு விழா லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.  அதில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன்,  தற்போதைய சூழலில் இளைஞர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.  அதன் காரணமாக மாரடைப்பு வருகிறது.  அதை தவிர்க்க சரியான தூக்கமும், முறையான உணவு பழக்கமும் தேவை என கூறினார்.  அத்துடன் மது மற்றும் புகை பிடித்தல் மட்டுமல்ல, நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்ளும் சர்க்கரை தான் முதல் Drugs. அதை முடிந்தவரை குறைக்க நாம் முயற்சிக்க வேண்டும். அனைவரும் உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அது மிகவும் முக்கியம். உடற்பயிற்சி செய்வது நமக்கு வரும் நோயை தடுக்க அல்ல, வந்தால் நம்மை பாதுகாக்க.  அதற்கு ஏற்ற வகையில் நம் உடலை தயார் படுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தன்னுடைய கல்லூரி காலங்கள் பற்றி அவர் நினைவு கூர்ந்தார். அப்போது கல்லூரி படிக்கும் போது ஒரு நாளைக்கு 50 முதல் 60 சிகரெட் வரை புகைத்தேன். அதே போல் முதல் திரைப்படம் எடுக்கும் பொழுது 180 சிகரெட் வரை புகைத்தேன்.  இதன் காரணமாக உடல்நலம் சோர்வடைந்து, மருத்துவர்களிடம் பரிசோதனைக்குச் சென்றேன். அவர் புகைப் பழக்கத்தை உடனடியாக விடுவது Essential என்று மருத்துவர் தெரிவித்தார். அதன் பிறகு அந்த பழக்கத்தை கைவிட்டேன் என தன்னுடைய அனுபவத்தை இளைஞர்களுடன் வெற்றிமாறன் பகிர்ந்து கொண்டார்.

அதன்பின்  செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிமாறன்,  இன்றைய இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.  அதை தவிர்க்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்கள்,  கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என கூறினார்.

திரைப்படங்களில் இடம்பெறும் மது அருந்துவது,  புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் ஒரு பகுதிதான். சமூகத்தில் அதைவிட பார்ப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் நிறைய இருக்கிறது.  என்னுடைய படங்களில் இது போன்ற காட்சிகளை முடிந்தவரை தவிர்ப்பேன். இதுவரை என்னுடைய படங்களின் கதாநாயகர்கள் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்து உள்ளேன் என தெரிவித்தார்.

அவரைப் போலவே இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் மருத்துவமனை மருத்துவர்கள்,  தற்போதைய சூழலில் 12 வயது சிறுவனுக்கும் 22 வயது இளைஞனுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே உணவு பழக்கம் உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Also read... வாரிசு திரைப்படத்திற்கு சிக்கல்... விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director vetrimaran