Home /News /entertainment /

Vetrimaaran: 'அசுரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார் இயக்குநர் வெற்றிமாறன்!

Vetrimaaran: 'அசுரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார் இயக்குநர் வெற்றிமாறன்!

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று டெல்லியில் விருது வழங்கப்படுகிறது.

    அசுரன் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் இயக்குநர் வெற்றிமாறன்.

    தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் 2019-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

    இதில் சிறந்த படமாக வெற்றிமாறனின் அசுரனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகரான தனுஷ் அறிவிக்கப்பட்டார். அதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகர் (துணை நடிகர்) விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளராக டி.இமானும், பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு சிறப்பு ஜூரி சிறந்த ஒலிப்பதிவு ரசூல் பூக்குட்டிக்கு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த குழந்தை நட்சத்திரமாக நாக விஷாலுக்கு (கருப்புதுரை) தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று டெல்லியில் விருது வழங்கப்படுகிறது. இதையடுத்து அசுரன் படத்திற்கான தேசிய விருதை இயக்குநர் வெற்றிமாறன் பெற்றார். அவருக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இவ்விருதினை வழங்கினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Director vetrimaran

    அடுத்த செய்தி