ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெற்றி மாறன் தயாரிக்கும் அனல் மேலே பனித்துளி படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு…

வெற்றி மாறன் தயாரிக்கும் அனல் மேலே பனித்துளி படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு…

அனல் மேலே பனித்துளி படத்தில் ஆண்ட்ரியா

அனல் மேலே பனித்துளி படத்தில் ஆண்ட்ரியா

வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பாக ஆண்ட்ரியா முன்னணி கதாப்பாத்தில் நடிக்கும் அனல் மேலே பனித்துளி என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து வரும் அனல் மேலே பனித்துளி படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் வெற்றிப் பட இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் வெற்றி மாறன். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

வெற்றி தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் இணைகிறார் வெற்றிமாறன்.

மாதவனின் ராக்கெட்ரி – நம்பி விளைவு படத்திற்கு சீமான் பாராட்டு…

படம் இயக்குவதை தவிர்த்து வெற்றிமாறன் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த பேனரின் கீழ், உதயம் என்.எச்.4, தனுஷ் நடித்த கொடி, பொறியாளன், காக்கா முட்டை, சங்க தலைவன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிறுவனம் சார்பாக தற்போது ஆண்ட்ரியா முன்னணி கதாப்பாத்தில் நடிக்கும் அனல் மேலே பனித்துளி என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கெய்சர் ஆனந்த் எழுதி இயக்கும் இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

' isDesktop="true" id="782454" youtubeid="H7sNB9x--NA" category="cinema">

இந்நிலையில் அனல் மேலே பனித்துளி படத்திலிருந்து முதல் பாடலாக கீச்சே கீச்சே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் உண்மையில் எப்படிப்பட்டவர்? விஜய் டிவி பிரபலத்தின் வைரல் பதிவு!

அறிவு எழுதியுள்ள இந்த பாடலை மீனாட்சி இளையராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

First published:

Tags: Andrea Jeramiah, Director vetrimaran