Home /News /entertainment /

Vetrimaaran: ட்விட்டர் கணக்கை டெலீட் செய்த இயக்குநர் வெற்றிமாறன்

Vetrimaaran: ட்விட்டர் கணக்கை டெலீட் செய்த இயக்குநர் வெற்றிமாறன்

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

சமூக வலைதள கணக்கு இருந்தாலும் அதில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனது ட்விட்டர் அக்கவுண்டை டீ-ஆக்டிவேட் செய்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து, ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகியப் படங்களை இயக்கியுள்ளார்.

    இதுவரை அவர் இயக்கத்தில் வெளியான 5-ல் 4 படங்களின் ஹீரோ தனுஷ் தான். அந்தளவுக்கு அவர்களின் திரைப்பணி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை 5 தேசிய விருதுகளை வென்றுள்ள இயக்குநர் வெற்றிமாறன், தற்போது விடுதலை, வாடிவாசல் ஆகியப் படங்களை இயக்கி வருகிறார்.

    இதில் விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி ஆசிரியராகவும் நடித்துள்ளனர். வாடிவாசல் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படங்கள் மட்டுமல்லாமல் சமூக விஷயங்கள் மீதும் நாட்டம் கொண்டுள்ள வெற்றிமாறன் அவ்வப்போது மேடைகளில் அது குறித்து பேசுவார்.

    சினிமா போலீஸ் என்றாலே அது விஜயகாந்த் தான்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    சமூக வலைதள கணக்கு இருந்தாலும் அதில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் அக்கவுண்டை டீ-ஆக்டிவேட் செய்துள்ளார் வெற்றிமாறன். விடுதலை, வாடிவாசல் என இரண்டு படங்களின் வேலைகளிலும் பிஸியாக இருப்பதால், கவனச் சிதறலை தடுக்கவே அவர் இவ்வாறு செய்திருக்கக் கூடும் என்கிறார்கள் ரசிகர்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Director vetrimaran

    அடுத்த செய்தி