ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திராவிட இயக்கங்களை பாராட்டிப் பேசிய இயக்குனர் வெற்றிமாறன்… அரசியல் பேச்சால் பரபரப்பு

திராவிட இயக்கங்களை பாராட்டிப் பேசிய இயக்குனர் வெற்றிமாறன்… அரசியல் பேச்சால் பரபரப்பு

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள். விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். – வெற்றி மாறன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருமாவளவன் மணி விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெற்றி மாறன் திராவிட இயக்கங்களை பாராட்டி பேசினார். அரசியல் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பியுமான திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் மணி விழாவையொட்டி, தமிழ் ஸ்டுடியோஸ் சார்பாக நேற்று விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது-

மக்களிடம் இருந்து விலகிஎந்தக் கலையும் முழுமை அடையாது. ஏனென்றால் மக்களுக்காகத்தான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்தக் கலையை சரியாக இன்றைக்கு நாம் கையாள வேண்டும். இன்றைக்கு நாம் கையாளத் தவறினால் ரொம்ப சீக்கிரத்தில் நிறைய அடையாளங்களை இழக்க நேரிடும்.

2 நாட்களில் ரூ. 150 கோடி வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்… வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு

தமிழ் சினிமாவை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற நிலையில் இருப்பதற்கு காரணம் என்று கருதுகிறேன். இதேபோன்று வெளி மாநிலங்களில்  இருந்து கலை ரீதியாக எந்த அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு தமிழ்நாடு இருக்கிறது. இதற்கும் திராவிட இயக்கங்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

சினிமா என்பது வெகு மக்களை எளிமையாக சென்றடையக் கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது ரொம்ப ரொம்ப முக்கியம்.

குடிக்கிறது கெட்ட பழக்கம், ஆனா நான் குடிப்பேன் - வைரலான விஜய்சேதுபதி பேச்சு!

சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

First published:

Tags: Director vetrimaran