ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராஜராஜ சோழனை இந்து அரசனாக மாற்றிவிட்டனர்: விவாதத்தை கிளப்பிய இயக்குநர் வெற்றிமாறன்

ராஜராஜ சோழனை இந்து அரசனாக மாற்றிவிட்டனர்: விவாதத்தை கிளப்பிய இயக்குநர் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றி மாறன்

இயக்குநர் வெற்றி மாறன்

நம்முடைய விடுதலைக்காக நாம போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதாக  இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளது தற்போது சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு கலை திருவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது; இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு பேசினார். அப்போழுது சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியதால் தான் தமிழ்நாட்டில் இன்னும் மதசார்பாற்றக தற்போது வரை விளங்கி வருவதாக கூறினார்.

  மேலும் கலையை சரியாக கையாள தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள் என பேசினார்.

  Also Read:2 நாட்களில் ரூ. 150 கோடி வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்… வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு

   

  அதேபோல் ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் பேசி இருந்தார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது சமூகவலை தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Director vetrimaran, Raja Raja Chozhan, Thol Thirumaavalavan