முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக திகழ்வதற்கு இது தான் காரணம் - இயக்குநர் வெற்றிமாறன்

தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக திகழ்வதற்கு இது தான் காரணம் - இயக்குநர் வெற்றிமாறன்

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

சாதி ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கல்வி அறிவின் அவசியம் போன்றவற்றை இத்தனை எளிமையாய் சொல்லிவிட்ட வேறு ஒரு இயக்குனர் ஒருவரை தேடிப் பார்க்கவேண்டும் என்ற அளவிற்கு ஜனரஞ்சகமும், நேர்த்தியும் இணைந்த ஒரு இயக்குனராக நவீன தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி வருபவர் வெற்றிமாறன்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புறசக்திகளின் அழுத்தம் இருந்தாலும்  தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக திகழ்வதற்கு, திராவிட சித்தாந்தத்தை தமிழ் சினிமா கையில் எடுத்துக் கொண்டதே காரணமென்று, இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

சாதி ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கல்வி அறிவின் அவசியம் போன்றவற்றை இத்தனை எளிமையாய் சொல்லிவிட்ட வேறு ஒரு இயக்குனர் ஒருவரை தேடிப் பார்க்கவேண்டும் என்ற அளவிற்கு ஜனரஞ்சகமும், நேர்த்தியும் இணைந்த ஒரு இயக்குனராக நவீன தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி வருபவர் வெற்றிமாறன்.

பைக்குகள் மீது இளைஞர்களுக்கு உள்ள காதலை மையமாக வைத்து பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றி கடும் போராட்டங்களுக்கு பிறகு இயக்குனராக உருவெடுத்த வெற்றிமாறன், முதல் திரைப்படத்திலேயே ஒரு வர்த்தக வெற்றி இயக்குனராகவும், சிறந்த படைப்பாளியாகவும் தன்னை நிரூபித்தார்.

இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் படத்தில் சேவல் சண்டையை மையமாக வைத்து திரைக்கதையில் அதீத திறனை வெளிப்படுத்திய வெற்றிமாறன், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என இரண்டு தேசிய விருதுகளை இரண்டாவது படத்திலேயே சொந்தமாக்கினார். மேலும் இத்திரைப்படம் அந்த ஆண்டில் அதிக பட்சமாக ஆறு தேசிய விருதுகளை வென்று ஒட்டுமொத்த இந்திய  சினிமா உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இதை அடுத்து லாக்கப் நாவலை மையமாக வைத்து விசாரணை திரைப்படத்தை இயக்கினார் வெற்றிமாறன். சாமானிய மனிதர்களுக்கு எதிரான காவலர்களின் அத்துமீறல்களை பிரதிபலித்த இந்த திரைப்படம் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கி தேசிய விருதை வாங்கிய கையோடு ஆஸ்கர் போட்டியிலும் பங்கேற்று அசர வைத்தது.

தொடர்ந்து வடசென்னை, அசுரன் ஆகிய அடுத்தடுத்த இரு வெற்றித் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் ஆச்சரியமாக உயர்ந்திருக்கும் வெற்றிமாறன் அசுரன் படத்துக்காக தனது அடுத்த தேசிய விருதை கைப்பற்றி  இந்திய திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

Also read... தெலுங்கில் சில்வர் ஜுப்லியாக அமைந்த கமல், ஸ்ரீதேவி ஜோடியின் கடைசிப் படம்

இயக்குனராக மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியராகவும் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து சினிமாவில் இயங்கிவரும் வெற்றிமாறன் இயக்குநராக தேசிய விருதுகளை அள்ளியது மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் காக்காமுட்டை திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார்.

விருது வெல்லும் திரைப்படங்கள் பெரும்பாலும் வணிகரீதியில் வெற்றி பெறாது என்ற எண்ணத்தை மாற்றி மக்கள் ரசிக்கும் ஜனரஞ்சகமான திரைப்படங்களை சிறந்த படைப்புகளாக உருவாக்க முடியும் என ஆணித்தரமாக நிருபித்து வரும் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் ஆச்சரியமாக கொண்டாடப்படுவதில் துளியும் வியப்பேதுமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director vetrimaran