ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்.. புதுப் படத்தை அறிமுகம் செய்த வெற்றிமாறன்

பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்.. புதுப் படத்தை அறிமுகம் செய்த வெற்றிமாறன்

அன்னபூரணி

அன்னபூரணி

புதுமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா என்பவர் இயக்கத்தில் ஜெய் பீம் பட நடிகை லிஜோமோல் ஜோஸ்,  பிக் பாஸ் புகழ் லாஸ்லியா மற்றும் தமிழ் நடிகர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படன் அன்னபூரணி.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குடும்ப அமைப்புக்குள் பெண்கள் சந்திக்கும் சிரமங்களையும் துயரங்களையும் மையமாக வைத்து அன்னபூரணி என்ற படத்தை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் அறிமுகப்படுத்தியுள்ளனர். 

புதுமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா என்பவர் இயக்கத்தில் ஜெய் பீம் பட நடிகை லிஜோமோல் ஜோஸ்,  பிக் பாஸ் புகழ் லாஸ்லியா மற்றும் தமிழ் நடிகர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படன் அன்னபூரணி.

இது திரில்லர் டிராமாவாக உருவாகி இருந்தாலும், அதில் குடும்பப் பின்னணியில் பெண்கள் சந்திக்கும் சிரமங்கள் மற்றும் துயரங்களை கதைக்களமாக்கியுள்ளார் இயக்குனர்.

அதுவும் குடும்ப அமைப்புக்குள் வாழும் பெண்ணாக பூரணி,  குடும்ப அமைப்பில் இருந்து வெளியே வாழும் அனா, ஆகிய இருவரின் வாழ்க்கை பயணத்தை சுற்றி இதற்கான திரைகதை அமைக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக அன்ன பூரணி திரைப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக இருக்கும் என கூறுகின்றனர்.

Also read... தீபாவளிக்கு அதிக வெள்ளி விழா படங்கள் தந்த கமல்ஹாசன் - எந்தெந்த படம் தெரியுமா?

அதேபோல் இந்த திரைப்படத்திற்கு பிரபல பாடலாசிரியர் யுக பாரதி பாடல்களுடன்,  வசனத்தையும் எழுதியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி -  திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அன்னபூரணி படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் அன்னபூரணி படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment