ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித்தின் பிறந்தநாளுக்கு பாத்து பண்ணுங்க... வெங்கட் பிரபு கோரிக்கை

அஜித்தின் பிறந்தநாளுக்கு பாத்து பண்ணுங்க... வெங்கட் பிரபு கோரிக்கை

அஜித் உடன் வெங்கட் பிரபு

அஜித் உடன் வெங்கட் பிரபு

அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் 2011-ம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அஜித்தின் 50-வது பிறந்தநாள் நெருங்கி வரும் நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் வரும் மே 1-ம் தேதி 50-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அன்று ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதோடு விளம்பர பணிகள் தொடங்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். ‘வலிமை’ படத்தின் தகவல்களுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழுவின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து #ValimaiFirstLookOnMay1st என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

இதனிடையே இயக்குநர் வெங்கட் பிரவு தனது ட்விட்டர் பதிவில், “மங்காத்தா பட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியை டேக் செய்து வரும் மே 1-ம் தேதி தலயின் 50-வது பிறந்தநாள். அதனால் அவரின் 50-வது படமான மங்காத்தா திரைப்படத்தை உங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஏப்ரல் 30-ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்தால் அஜித்தின் ரசிகர்களாகிய நாங்கள் உங்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருப்போம். பார்த்து செய்யுங்க” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது ட்வீட்டை சன் பிக்சர்ஸ்க்கும் அவர் டேக் செய்துள்ளார் வெங்கட் பிரபு.

அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் 2011-ம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் யுவனின் இசை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை வெங்கட் பிரபு ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடும் போது மங்காத்தா 2 எப்போது எடுப்பீர்கள் என்ற கேள்வியை அஜித்தின் தீவிர ரசிகர்கள் முன் வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Ajith, Kollywood, Venkat Prabhu