Home /News /entertainment /

ரஜினி படத்தை வெங்கட்பிரபு இயக்க வாய்ப்பு?

ரஜினி படத்தை வெங்கட்பிரபு இயக்க வாய்ப்பு?

ரஜினிகாந்த் - வெங்கட் பிரபு

ரஜினிகாந்த் - வெங்கட் பிரபு

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

ரஜினி படத்தை அடுத்து இயக்குகிறவர் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், வெங்கட்பிரபு இயக்க வாய்ப்புள்ளதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.

ரஜினி நடிப்பில் அண்ணாத்த படம் நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு வெளியானது. ரசிகர்கள் பெரும்பாலானவர்களுக்கு படம் பிடிக்கவில்லை. எனினும் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், வாங்கி வெளியிட்டவர்கள் என அனைவருக்கும் படம் லாபம் சம்பாதித்து கொடுத்ததாக கூறுகின்றனர். ஆனாலும், ட்ரேட் அனலிஸ்டுகள் படத்தை ஹிட் லிஸ்டுலும் சேர்க்கவில்லை.

ரஜினி அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என இன்னும் முடிவாகாமலே உள்ளது. துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் இருவரில் ஒருவர் ரஜினி படத்தை இயக்கலாம் என சொல்லப்பட்டது. தற்போது இதில் வெங்கட்பிரபுவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. ரஜினி படம் பார்த்து வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டினார். மாநாடு போன்ற ஒரு படத்தையும், வெற்றியையும் ரஜினி எதிர்பார்க்கிறார். விரைவில் இருவரும் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கக்கூடும் எனவும் தகவல்கள் வருகின்றன. ரஜினி படத்தை இயக்குவது யாராக இருப்பினும் விரைவில் அது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Rajinikanth

அடுத்த செய்தி