கதை எப்போ சொல்லுவீங்கனு சிவகார்த்திகேயன் கேட்ட கேள்விக்கு கதையா? என்று வடிவேலு ரியாக்ஷனை இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் பிரின்ஸ் இந்த திரைப்படம் 21ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் திரையிடப்படுகிறது.
படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா மற்றும் மாநாடு படத்தை எடிட்டிங் செய்த பிரவீன் ஆகியோர் பிரின்ஸ் படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் பிரின்ஸ் திரைப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பத்தோடு இப்படத்தைப் பார்க்கலாம் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று ட்விட்டரில் #AskSK என்ற ஹேஸ்டாக் மூலமாக கேள்விகளை கேட்களாம் என்று தெரிவித்திருந்தார்.
சிவகார்த்திகேயனிடம் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதற்கு சிவகார்த்திகேயனும் சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். இந்த வரிசையில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயனிடம் ப்ரோ நாம எப்போ ஷூட்டிங் போகலாம் அப்பறம் அனுதீப் உங்கள எதாவது டார்ச்சர் பன்னாறா என்று கேள்வி எழுப்பினார்.
Also read... சினிமா டிக்கெட் விலையை உயர்த்துங்க.. முதல்வருக்கு தியேட்டர் ஓனர்கள் கோரிக்கை!
இதற்கு சிவகார்த்திகேயனும் பதில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஹலோ விபி சார் ஷூட்டிங் எப்ப வேனாலும் போகலாம் சார். அப்றம் இந்த கத எப்ப சார் கேக்கலாம் என்றும் சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து எனக்கு ஒரு கேள்வி உங்ககிட்ட கேக்கனும் சார், நீங்க சொல்ற படத்துல பிரேம்ஜி ப்ரோ கூடா நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன் என்றும் கேட்டுள்ளார்.
Kadhaiya https://t.co/8petz7Spyf pic.twitter.com/ayfSRozooi
— venkat prabhu (@vp_offl) October 20, 2022
இந்த கேள்விக்கு என்னது கதையா என்று வடிவேலுவின் ரியாக்ஷனை ரிப்ளை ட்வீட்டில் போட்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்த ட்வீட்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sivakarthikeyan, Venkat Prabhu