'மங்காத்தா 2'-வை கேலி செய்த ரசிகருக்கு பல்பு கொடுத்த வெங்கட் பிரபு!

Mankatha | Ajith Kumar | Venkat Prabhu | அஜித் 50வது படமான மங்கத்தா மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு.

Web Desk | news18
Updated: June 13, 2019, 9:59 PM IST
'மங்காத்தா 2'-வை கேலி செய்த ரசிகருக்கு பல்பு கொடுத்த வெங்கட் பிரபு!
மங்காத்தா படப்பிடிப்பின் போது
Web Desk | news18
Updated: June 13, 2019, 9:59 PM IST
'மங்காத்தா 2' படம் தொடர்பான  ரசிகரின் காட்டமான கேள்விக்கு இயக்குனர் வெங்கட் பிரபு கிண்டலான பதிலை பதிவு செய்துள்ளார்.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் அஜித் சிம்பிளான மேக்கப்பில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என பலர் புகழ்ந்துள்ளனர்.

இயக்குனர் வெங்கட் பிரபுவும் ட்விட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். “ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க'' என்ற வசனத்தை பதிவு செய்து தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பதிவை தொடர்ந்து அஜித் ரசிகர் ஒருவர் 'மங்காத்தா 2' வெற்றிக் கூட்டணி மீண்டும் எப்போது என்று பதிவு செய்தார். இதை கிண்டல் செய்யும் விதமாக மற்றொருவர், வெங்கட் பிரபு 'மங்காத்தா 2' எடுத்தால் அது கண்டிப்பாக தோல்வியடையும். அது அவருக்கே தெரியும். ஏன்னா அவர்கிட்ட ஒழுங்கா ஒரு கதை கூட இல்லை என்றார்.

ரசிகரின் அந்தப் பதிவிற்கு வெங்கட் பிரபு தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார். வைச்சுகிட்டா வஞ்சனை பண்றான். என்னைக்கு என்கிட்ட கதை இருந்து இருக்கு என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.அஜித் 50-வது படமான மங்கத்தா மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்தப் படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. மங்காத்தா வெற்றியைத் தொடர்ந்து அதே கூட்டணி 2வது பாகத்தை எடுக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Also Watch

First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...