Venkat Prabhu: இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்தப்பட அறிவிப்பு!

வெங்கட் பிரபு

'வெங்கட் பிரபுவின் விரைவு’ எனக் குறிப்பிட்டு தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

  • Share this:
    தனது அடுத்தப்படம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

    சென்னை 28, மங்காத்தா, கோவா, உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தற்போது இவர் நடிகர் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வருகிறார். அரசியல் களத்தில் அமைந்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

    இந்நிலையில் மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. அவர் இயக்கும் 10-வது படமாக இது உருவாகவிருக்கிறது.



    'வெங்கட் பிரபுவின் விரைவு’ எனக் குறிப்பிட்டு தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை பிறகு வெளியிடுவதாக தெரிவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்து கொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. மருத்துவமனை வாசலிலும் கொரோனா பயத்திலும் இருக்கும் இச்சூழலில் இரக்கமற்று 'மாநாடு' படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். ஊரடங்கு முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: