மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
மாநாடு படத்திற்கு முன்னதாக, சென்னை 28 படத்தின் 2ம் பாகத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் முதல் பாகத்தை போன்று எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. சென்னை 28- படத்தின் 2ம் பாகம் கடந்த 2016-ல் வெளியான நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் திரைக்கு வந்தது.
ஹாலிவுட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த டைம் லூப் திரைக்கதையை மாநாட்டில் பயன்படுத்தி, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். படத்தில் காட்சிகள் ரிப்பீட் ஆனாலும், அவை விறுவிறுப்பை அதிகரிக்க மட்டுமே செய்தன.
Also Read :
நார்வே தமிழ் சினிமா திருவிழா... மாநாடு படத்திற்கு 4 விருதுகள் அறிவிப்பு
50 நாட்களை கடந்த சில திரையரங்குகளில் மாநாடு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த படத்திற்கு விருதுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. நார்வே தமிழ் சினிமா திருவிழாவில், மாநாடு படத்திற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Also Read :
bigg boss 5 finale : இன்று பிரம்மாண்டமான பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சி.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே வெங்கட் பிரபு அடுத்ததாக என்ன படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது.
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்திற்கு மன்மத லீலை என பெயர் வைத்துள்ளனர். அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
இந்த படத்தில் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை வெங்கட் பிரபு மாற்றியுள்ளார். அந்த வாய்ப்பு அவரது சகோதரர் பிரேம்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை தமிழ் அழகன் மேற்கொள்ள, எடிட்டிங் பணிகளை வெங்கட் ராஜன் கவனிக்க உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.