இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் நாகசைத்தன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்திருந்தார். நீண்ட நாள் கழித்து, வெங்கட் பிரபுவுக்கும், சிம்புவுக்கும் மாநாடு திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்திருந்தது.
இதையடுத்து கடந்த வாரம் வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மதலீலை திரைப்படம் வெளியானது. அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இதனை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.