’எல்லாம் அப்பாவின் ஆசி’ விஜய் வசந்துக்கு இயக்குநர் வெங்கட் பிரபு வாழ்த்து!

’எல்லாம் அப்பாவின் ஆசி’ விஜய் வசந்துக்கு இயக்குநர் வெங்கட் பிரபு வாழ்த்து!

விஜய் வசந்த்

பாஜக சார்பாக, பொன். ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான, விஜய் வசந்தும் போட்டியிட்டனர்.

 • Share this:
  கன்னியாக்குமரி மக்களவை தொகுதியில் முன்னணி பெற்று வரும் நடிகர் விஜய் வசந்துக்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  வசந்த் அண்ட் கோ நிறுவனரும், கன்னியாக்குமரி காங்கிரஸ் எம்.பி-யுமான ஹெச். வசந்த குமார் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அத்தொகுதிக்கு இடைதேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

  இதையடுத்து பாஜக சார்பாக, பொன். ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான, விஜய் வசந்தும் போட்டியிட்டனர். அதோடு தற்போது வரை பொன்.ராதாகிருஷ்ணனை விட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்று வருகிறார் விஜய் வசந்த்.

  இந்நிலையில் அவருக்கு இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், ’மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே.. எல்லாம் உங்கள் அப்பாவின் ஆசி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: