வேலையில்லா பட்டதாரி பட இயக்குநர் வேல்ராஜின் தந்தை உயிரிழப்பு

வேலையில்லா பட்டதாரி பட இயக்குநர் வேல்ராஜின் தந்தை காலமானார்.

வேலையில்லா பட்டதாரி பட இயக்குநர் வேல்ராஜின் தந்தை உயிரிழப்பு
இயக்குநர் வேல்ராஜ்
  • Share this:
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் வேல்ராஜ். ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் அறிமுகமான இவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து தனுஷ் - சமந்தா நடித்த தங்கமகன் படத்தையும் இயக்கிய இவர், அசுரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை உள்ளிட்ட அனைத்து படங்களுக்கும் வேல்ராஜ் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இவரது தந்தை எஸ்.ராஜாமணி வயது மூப்பு காரணமாக இன்று மதியம் மரணமடைந்தார். அவருக்கு வயது 99. நாளை அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




வேல்ராஜின் தந்தை மறைவை அறிந்த திரைத்துறையினர் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். கொரோனா காலத்தில் இயக்குநர் வேல்ராஜ் வீட்டில் நடந்திருக்கும் இந்த மரணம் அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading