’அங்காடித்தெரு கனவு மெல்ல நிறைவேறுகிறது’ - இயக்குநர் வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன்

என் அங்காடித்தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது.

 • Share this:
  அங்காடித்தெரு கனவு மெல்ல நிறைவேறுவதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு முழுவதும் வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக் கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற சட்டப்பேரவையில் நேற்று சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.

  இந்த சட்ட முன்வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த சட்ட திருத்தத்தைத் தாக்கல் செய்திருப்பதற்கு சமூக வலைதளத்தில் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  இந்நிலையில் இந்த உத்தரவை பாராட்டி இயக்குநர் வசந்தபாலன் தனது சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “தமிழக அரசுக்கு நன்றி. என் அங்காடித்தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. அங்காடித் தெரு திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி கூறியிருப்பேன் உங்களுக்கு நினைவிருக்கலாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: