• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vasanthabalan: 'ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் திரையுலகைப் பிடித்த கொரோனா' - இயக்குநர் வசந்தபாலன்

Vasanthabalan: 'ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் திரையுலகைப் பிடித்த கொரோனா' - இயக்குநர் வசந்தபாலன்

இயக்குநர் வசந்தபாலன்

இயக்குநர் வசந்தபாலன்

வெறும் பொழுதுபோக்கு படங்களை எடுக்க எழுத்தாளர்கள் கலைஞர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

  • Share this:
    ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் திரையுலகைப் பிடித்த கொரோனா. மாநில எல்லைகளைக் கடந்து இந்தியத் திரையுலகமே இதற்கு கைகோர்த்து எதிர்க்க வேண்டும் என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மொத்த இந்திய திரையுலகமே எதிர்ப்பைக் காட்ட சட்டம் திரும்ப பெறப்படும் வரை, கருப்பு சட்டை அணிதல் அல்லது ஒருநாள் உண்ணாவிரதம் அல்லது ஊர்வலம் இதில் ஏதாவது ஒன்றை செய்யலாம். அல்லது எல்லாவற்றையும் செய்யலாம்.

    இந்த ஒளிப்பதிவுச்சட்டம் என்ன தான் சொல்கிறது? ஏன் எதிர்க்கப்படவேண்டும் ?

    சட்டத்தின் சில ஷரத்துகள் கீழே...

    ஒளிப்பதிவுச் சட்டம் 1952-ன் பிரிவு 5B (1)-ல், "ஒரு படம் நாட்டின் பாதுகாப்புக்கோ, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கோ, மற்ற நாடுகளுடனான நட்புறவுக்கோ, சட்ட ஒழுங்கிற்கோ, ஒழுக்கம் அல்லது அறநெறிக்கோ ஊறுவிளைவிப்பதாக இருந்தால் அதற்குச் சான்றிதழோ பொதுவெளியில் திரையிடப்படுவதற்கான அனுமதியோ மறுக்கப்படும். இது அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது இதுபோன்ற எந்தவொரு குற்றத்திற்கும் பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் புதிய சட்டத்திருத்த வரைவில், இந்தப் பிரிவு 5B (1)-ஐ மீறும் எந்தவொரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழையும் புதிய பிரிவு 6 (1)-ன் படி, மத்திய அரசு திரும்பப் பெற முடியும். அதாவது சென்சாரே ஒப்புதல் அளித்திருந்தாலும் மத்திய அரசு நினைத்தால் ஒரு படம் வெளியாவதைத் தடுக்க முடியும். சென்சார் போர்டின் முடிவை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட முடியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்சாரில் சிக்கலாகும் திரைப்படங்கள் டிரிபுனலுக்கு செல்வது வழக்கம். இப்போது அதுவும் கலைக்கப்பட்ட பிறகு சென்சாரில் தடை செய்யப்பட்ட படத்தை எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்கு அலைந்தே தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் அவர்கள் பட்ட அவஸ்தையை உலகம் அறியும்.

    இதையும் தாண்டி ஒழுக்கம், அறநெறி இதற்கு ஏதேனும் வரைமுறை உள்ளதா எனில் இல்லை ஆளுக்கு ஆள், மதத்திற்கு மதம், ஜாதிக்கு ஜாதி இந்த ஒழுக்கம் மற்றும் அறநெறி மாறுபடும் போது, சமூக அறத்தை, தனிமனித ஒழுக்கத்தை பொது ஒழுக்கத்தை விமர்சனம் செய்யும் படங்கள் வெளியாவது தடுக்கப்படும்.

    பிங்க், கோர்ட், நியூட்டன், ஷெர்னி, ஆர்ட்டிக்கிள் 15 போன்ற கருத்தாளம் மிக்க திரைப்படங்கள் வெளியாவது தடுக்கப்படும். வெளியாவது தடுக்கப்படும் போது வெறும் பொழுதுபோக்கு படங்களை எடுக்க எழுத்தாளர்கள் கலைஞர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

    விமர்சனம் இல்லாத சமூகம் மேம்படாது. இந்த சட்டப்பிரிவு இன்னும் ஆபத்தானது. சென்சார் செய்யப்பட்டு ரிலீஸான படங்கள் பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்சார் செய்யப்பட வேண்டும் என்கிற சட்டப்பிரிவு தயாரிப்பாளர்களை கடுமையாக பாதிக்கப்படும்.

    எப்படி எனில் டெலிவிஷன் மற்றும் டிஜிட்டல் உரிமைகளில் வரும் தொகைகளில் தான் இன்றைய திரையுலகமே ஜீவித்திருக்கின்ற நிலையில் பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்சார் என்பது ஒட்டு மொத்த டிஜிட்டல் வியாபாரத்தையே பாதிக்கும். இது திரையுலகிற்கு இழைக்கப்பட்ட அநீதி” என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: