பார்த்திபனின் ஒத்த செருப்பை பாராட்டிய இயக்குனர் வசந்த பாலன்!

சமகால அரசியலை, நடுத்தர வர்க்கனின் அன்றாட வாழ்க்கையை பார்த்திபன் சாருக்கே உண்டான நையாண்டியுடன் படம் நெடுக வசனங்களை எழுதியுள்ளார் பார்த்திபன் என்று இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபனின் ஒத்த செருப்பை பாராட்டிய இயக்குனர் வசந்த பாலன்!
இயக்குநர் வசந்தபாலன்
  • News18
  • Last Updated: September 16, 2019, 3:04 PM IST
  • Share this:
பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பாராட்டி இயக்குனர் வசந்த பாலன் சமூக வலைதளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

புதிய பாதை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சாந்தனு, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை அடுத்து பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு. எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பும்’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ரசூல் பூக்குட்டியும் பணியாற்றியுள்ளார்.


இந்நிலையில் வரும் 20-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் வசந்த பாலன் படத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ரா.பார்த்திபன் சாரின் அழைப்பின் பேரில் ஒத்த செருப்பு திரைப்படத்தை கண்டேன். ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டுஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது மற்றும் இயக்குவது மிக பெரிய சவால். அதை உலகமெங்கும் பல்வேறு திரைஆளுமைகள் சாதித்து காட்டியுள்ளனர்.


பார்த்திபன் சார் இதை எவ்வாறு கையாண்டுள்ளார் என்று எதிர்பார்ப்பு படவெளியீடு அறிவிப்பு வந்த நாளில் இருந்தே
எனக்குள் ஒரு படைப்பாளியாய் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

ஆகவே அதிக ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன்.
ஒளி,ஒலி,எடிட்டிங்,இசை,வசனம்,மேக்கப் இப்படி பல தொழிற்நுட்பங்களை மிக நுட்பமாக கையாண்ட திரைப்படமாக இந்த திரைப்படத்தை நான் உணர்ந்தேன்.
ஆழமான விசாரணைகளை,கேள்விகளை நமக்குள் உருவாக்குகிற திரைப்படமாக படம் விரிகிறது.

சமகால அரசியலை, நடுத்தர வர்க்கனின் அன்றாட வாழ்க்கையை பார்த்திபன் சாருக்கே உண்டான நையாண்டியுடன் படம் நெடுக வசனங்களை எழுதியுள்ளார் பேசியுள்ளார்.

Also read... எந்த ‘ஷா’வும் சத்தியத்தை மாற்றிவிட முடியாது...! ஒரே நாடு ஒரே மொழி விவகாரத்தில் கமல் காட்டம்

பார்த்திபன் சாரின் வசன அமைப்பு ஒரு கத்திக்குள் ஒரு குறும் கத்தி அதற்குள் இன்னொரு சிறிய கத்தி அதற்குள்
இன்னும் ஒரு சின்னஞ்சிறிய கத்தியும் மயிலிறகுயும் இருக்கும்.

மிக கவனமாக படத்தை பார்க்கையில் கதையின் பல்வேறு படிமங்கள் வசனங்களில் உறைந்து கிடப்பதைக் காணலாம். பரீட்சார்த்த முயற்சிகள் எந்தவொரு துறைக்கும் அவசியமானது. அப்படி இந்த திரைப்படம் தமிழ்த்திரைப்படங்களில் ஒரு பெரிய முன்னெடுப்பு. வாழ்த்துகள் பார்த்திபன் சார். பல உயரிய விருதுகள் உங்கள் வாசல் வரட்டும் என்றும் இயக்குனர் வசந்த பாலன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Also see...First published: September 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading