• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'இது இரண்டும் விஜய்யின் தளபதி 66-ல் நிச்சயம் இருக்கும்’ - இயக்குநர் வம்சி!

'இது இரண்டும் விஜய்யின் தளபதி 66-ல் நிச்சயம் இருக்கும்’ - இயக்குநர் வம்சி!

தளபதி 66

தளபதி 66

பீஸ்ட் படத்தைத் தொடந்து விஜய்யின் 66-வது படத்தை இயக்குகிறார் இயக்குநர் வம்சி. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

  • Share this:
    தளபதி 66 திரைப்படம் குறித்து ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்டை கொடுத்துள்ளார் இயக்குநர் வம்சி.

    விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    இந்நிலையில் பீஸ்ட் படத்தைத் தொடந்து விஜய்யின் 66-வது படத்தை இயக்குகிறார் இயக்குநர் வம்சி. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. நாகர்ஜுனா, கார்த்தியை வைத்து தோழா படத்தை இயக்கிய வம்சி, தற்போது 2-வது தமிழ் படமாக ‘தளபதி 66’ ஐ இயக்குகிறார்.

    தளபதி 66 படத்தின் அப்டேட்டுகளுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, மகிழ்ச்சியான செய்தியை சொல்லியிருக்கிறார் இயக்குநர் வம்சி. அதில், “மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள் தான் எனது பலம். அதனால் விஜய் சாரின் படத்திலும் இந்த இரண்டு காரணிகள் இருக்கும். விஜய் சாரின் ரசிகர் பட்டாளத்தையும், அவரது நட்சத்திர அந்தஸ்தையும் நினைவில் வைத்து தான் திரைக்கதையை எழுதினேன். டிசம்பரில் இருந்து அனைத்து அப்டேட்களும் வெளியாகும். நாங்கள் ஸ்கிரிப்ட் வேலையை முடித்துவிட்டோம், எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களிடமிருந்து பல அப்டேட்டுகளைப் பெறுவீர்கள்” என்றார்.

    விஜய்யைப் பற்றி பேசிய அவர், ”தமிழ் சினிமாவில் உச்சத்தை எட்டியிருந்தாலும் அவர் அடக்கமாகவே இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படத்தைத் தொடங்குவதற்கான முக்கியமான அளவுகோல், இயக்குநருடன் ஒத்துப்போக வேண்டும்” எனவும் தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: