முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல் தகனம்..!

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல் தகனம்..!

டி.பி.கஜேந்திரன் உடலுக்கு இறுதிச்சடங்கு

டி.பி.கஜேந்திரன் உடலுக்கு இறுதிச்சடங்கு

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு இறுதிச் சடங்கு முடிந்து சாலி கிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன்  கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். தமிழ் சினிமாவில் 'வீடு மனைவி மக்கள்' என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம், மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட 27 திரைப்படங்களை இயக்கினார். ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார்.

72 வயதான டி.பி.கஜேந்திரன் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், டி.பி. கஜேந்திரன் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை காலமானார்.

டி.பி கஜேந்திரனின் இல்லத்திற்கு சென்ற அவரது கல்லூரி தோழரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதுபோலவே திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு இறுதிச் சடங்கு முடிந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வடபழனி ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

First published:

Tags: Actor