• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அஜித் படத்தை இயக்கும் தியாகராஜன் குமாரராஜா...?

அஜித் படத்தை இயக்கும் தியாகராஜன் குமாரராஜா...?

தியாகராஜன் குமாரராஜா - அஜித்

தியாகராஜன் குமாரராஜா - அஜித்

என்னை அறிந்தால் மூலம் தியாகராஜன் குமாரராஜாவின் திறமை அஜித்துக்கு நேரடியாகவே தெரியும்

  • Share this:
    அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அதையடுத்து அவர் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அஜித்தின் அடுத்தப் படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்குவார் என புதிய செய்தி அடிபடுகிறது.

    ஒரே இயக்குனரின் படத்தில் தொடர்ச்சியாக நடிப்பது அஜித்துக்கு புதிதல்ல. சிவா இயக்கத்தில், வீரம் படத்தில் நடித்த அஜித், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடித்தார். அதனையடுத்து போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். அந்த கூட்டணி வலிமை படத்திலும் தொடர்ந்தது.

    வலிமை 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த போனி கபூர், மீண்டும் அஜித் நடிக்கும் படத்தை தயாரிப்பதாக அறிவித்தார். அந்தப் படத்தையும் ஹெச்.வினோத் இயக்குவார் என கூறப்பட்டது. தற்போது வேறு தகவல்களும் வருகின்றன. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் அஜித் நடிக்கயிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

    கௌதம் வாசுதேவ மேனன் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கிய போது, வழக்கம்போல அரைகுறை ஸ்கிரிப்டுடன் படப்பிடிப்புக்கு சென்றார். படத்தை எப்படி முடிப்பது, கிளைமாக்ஸை எப்படி அமைப்பது என திணறியபோது அவர் துணைக்கு அழைத்துக் கொண்டது இருவரை. அந்தாதுன் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா. அவர்கள் அளித்த ஆலோசனையின்படி என்னை அறிந்தால் படத்தின் கிளைமாக்ஸை கௌதம் எடுத்தார். அந்தப் படத்தின் கடைசி அரைமணி நேரம் முந்தையக் காட்சிகளைவிட விறுவிறுப்பாகவும், சுவாரஸியமாகவும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

    என்னை அறிந்தால் மூலம் தியாகராஜன் குமாரராஜாவின் திறமை அஜித்துக்கு நேரடியாகவே தெரியும், ஆகவே அஜித்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கப்போகிறார் என்பது உண்மையே என்கிறார்கள்.. எதுவாக இருப்பினும் அதிகாரப்பூர்வமாக வரும்வரை அனைத்தும் யூகங்கள் மட்டுமே.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: