இனிமேலும் கண்டுகொள்ளாமல் விட்டால் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் - தங்கர் பச்சான் இறுதி எச்சரிக்கை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தன் பெயரில் போலி செய்திகள் உலவி வருவதாகவும் இயக்குநர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

இனிமேலும் கண்டுகொள்ளாமல் விட்டால் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் - தங்கர் பச்சான் இறுதி எச்சரிக்கை
தங்கர் பச்சான்
  • Share this:
ஒளிப்பதிவாளர், நடிகர், எழுத்தாளர் என கலைத்துறையில் பன்முக திறமை கொண்டவர் தங்கர் பச்சான். களவாடிய பொழுதுகள் படத்தை அடுத்து தனது மகன் ஹீரோவாக நடிக்கும்  ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற படத்தை இயக்கி வரும் இவர், தனது பெயரில் போலி செய்திகள் உலவி வருவதாக கூறி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “அண்மை காலமாகவும் கடந்த காலங்களிலும் என் உருவ படங்களை பயன்படுத்தியும், என் பெயரை பயன்படுத்தியும் போலிச் செய்திகள் உலவுகின்றன. இன்று கூட " சாத்தான் குளம் இரட்டைக் கொலை" குறித்த என் பெயரில் உலவும் செய்தி ஒன்றினை நண்பர் அனுப்பி வைத்திருந்தார். இன்றுவரை இக்கொலைகள் குறித்த எந்த கருத்தையும் நான் தெரிவிக்காத நிலையில் இப்படிப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டவர் தண்டனைக்கு உள்ளாவார்.

இணைய கூலிகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் இதுபோன்ற செய்திகளை இனிமேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என உணர்ந்தபடியால் இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கிறேன்.


நான் பேசினாலும், எழுதினாலும், அறிக்கை விடுத்தாலும் எனது கைப்பேசி எண்களிலிருந்து இயங்கும் வாட்ஸ்அப் எனது ட்விட்டர், ஃபேஸ்புக் இவைகளில் மட்டுமே அச்செய்திகள் வெளிவரும். இவைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமே அச்சு ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் தரப்படும். எனவே எனது கணக்கில் வெளியாகும் செய்திகள் மட்டுமே என்னுடையவை.

இனி என்னுடைய பெயரில் எந்த செய்திகள் வெளிவந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் மேல் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இறுதி எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading