தமிழக அரசியல் இவ்வளவு தான்... படம் போட்டு கதை சொன்ன தங்கர்பச்சான்

இயக்குநர் தங்கர்பச்சான்

தமிழக அரசியல் வழி நடத்தும் மக்களின் நிலை என்று கூறி ஒற்றைப் புகைப்படம் மூலம் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான்.

  • Share this:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குறுதிகளை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் கலைஞர் தொலைக்காட்சி, மடிக்கணினி, மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இல்லத்தரசிகளுக்கு அம்மா இலவச மிக்ஸி, கிரைண்டர், ஆடு மாடு வழங்குதல் உள்ளிட்டவை இலவசங்களாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதைப் போல் இந்தமுறை அதிமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, வாஷிங்மெஷின் இலவசம், ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.

திமுகவும் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் மாணவர்கள் கல்வி பயில இலவச டேப் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடனில் தத்தளித்து வரும் தமிழக அரசு மீண்டும் இலவசங்கள் கொடுப்பதால் நிதிச்சுமை அதிகரிக்கும் என்றும், இது வாக்குக்காக கொடுக்கப்படும் வெற்று வாக்குறுதிகள் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதேவேளையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் மக்கள் நல அரசு இதுபோன்ற இலவசங்களை கொடுப்பது சரிதான் என்ற ஆதரவுக் குரலும் ஓங்கி ஒலிப்பதையும் காண முடிகிறது. இந்நிலையில் இயக்குநர் தங்கர் பச்சான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இது ஒரு படம்தானே என கடந்து விட முடியாது. தமிழக அரசியல் வழி நடத்தும் தமிழ் மக்களின் நிலை. நான் படம் பிடித்ததிலேயே எனக்குப் பிடித்தப் படங்களில் இதுவும் ஒன்று.” என்று கூறியுள்ளார்.



தங்கர் பச்சானின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
Published by:Sheik Hanifah
First published: